2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'மு.கா., ந.தே.மு. இணைந்தமையால் வெற்றி'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணியொன்றில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்தமையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் அரசியல் எழுச்சியையும் வெற்றியையும் கண்டுள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்த பாரிய உழைப்பு மற்றும் தியாகங்கள் மூலமாக இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி முன்கொண்டு சென்று இன்னும் பல வெற்றிகளை காண்பதென்பது மு.கா.வின் கைகளில் தங்கியுள்ளதாகவும்; அவர் கூறினார்.

காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா. பாரிய பின்னடைவுகளை கடந்த காலத்தில் கண்டிருக்கிறது. கட்சியால் வளர்க்கப்பட்டவர்கள் அந்தக் கட்சிக்கு செய்த துரோகத்தனங்களும் அவ்வாறானவர்கள் தொடர்பில் கட்சி நடந்துகொண்ட விதமும் இதற்கு பிரதான காரணங்களாக இருந்தன. இந்த வீழ்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான சில சக்திகள் தம்மை வளர்த்துக்கொண்டன' என்றார்.   

'இந்த இடைவெளியை நிரப்பும் வகையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. முஸ்லிம் கட்சிகள் சுய விமர்சனத்துக்கு ஊடாக தமது தவறுகளை இனங்கண்டு அவற்றுக்கான பரிகாரங்களை மேற்கொண்டு சமூகத்துக்கும் நாட்டுக்கும் பணியாற்றும் வகையில் முன்னகர வேண்டுமென்பதே அனைவரினதும்  எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அந்தப் பின்னணியிலேயே கடந்த நாடாளுமன்றத்; தேர்தலுக்கு முன்பாக மு.கா. வுடன் தேர்தல் கூட்டணியை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.  

நல்லாட்சிக்காக கூட்டிணைந்து உழைத்தல், பிரதேச மற்றும் இன உறவுகளை வலுப்படுத்துதல் முஸ்லிம் சமூகத்தினதும் ஏனைய மக்களினதும் நலன்களை பாதுகாத்தல் போன்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மு.கா. வுடன்  கைச்சாத்திட்டோம். இந்தக் கூட்டணியை முஸ்லிம் மக்கள் பாரிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்றனர்.  இந்தக் கூட்டணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்த தேர்தல் வெற்றி இதனை உறுதி செய்கிறது' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .