2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

152 பேருக்கெதிராக வழக்குகள் பதிவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 08 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், கடந்த ஜூன் மாதம் வரை, டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 152 பேருக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன என, சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக், இன்று (08) தெரிவித்தார்.

சுகாதாரப் பிரிவினர், எத்தகைய நடவடிக்கையெடுத்து வழக்குத் தாக்கல் செய்தாலும், பொதுமக்கள் விழிப்படையாதவரை, டெங்குத் தொற்றின் தாக்கத்தை, இந்தப் பிராந்தியத்திலிருந்து ஒழிப்பதென்பது கேள்விக்குறியானதொரு விடயமாகவே இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், 2010, 2011ஆம் ஆண்டுகள் என்பது மிக மோசமான டெங்குத் தாக்குதலுக்குள்ளாகிய காலகட்டமாக இருந்ததாகவும் தெரிவித்த அவர், அவ்வேளையில், சுகாதாரத் திணைக்களம், ஏறாவூர் நகர சபையின் உதவியுடன் உயிராபத்துக்களின்றி டெங்குத் தொற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும், 2018க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் டெங்கு குடம்பிகள் காணப்படும் இடங்களில் பொதுமக்களுக்கெதிராக அவ்வப்போது ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திலே வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், டெங்குத் தாக்கத்தை ஒழிப்பது சவாலுக்குரியதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .