2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அவசியமான நேரங்களில் வைத்தியர் இல்லையென புகார்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராக்கி)

சந்திவெளி வைத்தியசாலையில் அவசியமான நேரத்தில் வைத்தியர் இல்லாமையால் நோயாளர்கள் பல சிக்கலை எதிர்க்கொள்வதாகவும் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு திகிலிவெட்டை, சந்திவெளி பொதுமக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் முறையிட்டுள்ளனர்.

பொதுமக்கள் நேற்று வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்ட முறைப்பாட்டு அறிக்கையில், சந்திவெளி வைத்தியசாலையில் வைத்தியர்கள் காலை 10 மணியளவில் சமூகமளித்து பிற்பகல் 12 மணியளவில் சென்று பின்னர் 2.30 மணிக்கு வருகைதந்து 3.30 மணியளவில் சென்று விடுகின்றனர்.

இதனால் தூர இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் பலர் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இவ்வைத்தியசாலையின் செயற்பாடு மந்தகதியில் உள்ளது. வாழைச்சேனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள இவ்வைத்தியசாலையை காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை திறந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென கேட்கப்பட்டுள்ளதுடன் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மக்களின் கோரிக்கை தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சதுர்முகத்துடன் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டதாகவும் இவ்விடயத்தை கருத்தில் கொண்டு, இக்குறையை சீர் செய்ய சகல நடவடிக்கையும் எடுப்பதாக உறுதியளித்ததுடன் இவ்விடயத்தை எழுத்து மூலம் தரும்படி கூறியிருப்பதாகவும் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X