2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலக உணவுத்திட்டத்தின் உயர்மட்ட செயலமர்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

உலக உணவுத்திட்டத்தின் உயர்மட்டச் செயலமர்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலைமுதல் மட்டக்களப்பு கச்சேரியில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன், உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு அலகு அதிகாரி எஸ்.மதிவண்ணன், ஜுமுனா இப்ராஹிம், யுனிசெப் அமைப்பைச் சேர்ந்த பல்மா ஹம்ஸா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் உலக உணவுத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கடந்தகால செயற்பாடுகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்த வருடத்தில் இச் செயற்திட்டம் பலமுடையதாகவும் பயனுறுதி மிக்கதாகவும் நடைபெற வேண்டும் என அரசாங்க அதிபரால் வலியுறுத்தப்பட்டது.

கடந்த வருடங்களில் உலக உணவுத்திட்டத்தின் பயிற்சிக்கான உணவுத்திட்டத்தின் கீழ் யுனிசெப் அமைப்பு பயிற்சிகளை வழங்கியிருந்தது. இந்தப்பயிற்சியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு யுனிசெப்பின் மாணவர் படையணியாக உருவாக்கப்பட்டு சுகாதாரப் பழக்கவழக்கங்கள் குறித்து பயிற்சிகளை வழங்கியிருந்தது.

இம் மாணவர் படையணியினர் அவர்கள் பெற்ற பயிற்சியினை வைத்து தமது பாடசாலையிலும் கூழவுள்ள பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களிலும் கவனம் செலுத்துவர். அதிபர்கள் இவர்களின் விழிப்பூட்டல் நடவடிக்கைகள், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் சமூக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களைச் செய்தல் வேண்டும்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் கல்வித் திணைக்களம் சார்பாக பிரதேச கல்விப் பணிப்பாளர்கள், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், அபிவிருத்தி உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .