2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை ஒப்படைக்க தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடும் சகல மீனவர்கள் பாவிக்கும் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகள் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடுத்தும் தடை செய்யப்பட்ட 3.5 அங்குலத்திற்கும் குறைவான தங்கூஸ் வலை, முக்கூட்டு வலை, சுருக்கு வலை போன்றவற்றை நாளை முதல் ஒரு வார காலத்திற்குள் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

ஒரு வார காலத்திற்குள்  சட்ட விரோத வலைகளை ஒப்படைக்காத மீனவர்கள் மீது மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருனாரட்னவின் ஆலோசனையின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதனால் மட்டக்களப்பு வாவியிலுள்ள 112 மீனினங்களில் 28 வகையான மீனினங்கள் அழிந்துள்ளதாகவும் உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.
 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .