2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொப்பிக்கலை காட்டில் நான் இருந்திருந்தால் சிறார்கள் குட்டிச் சுவராகியிருப்பர்- பிரதியமைச்சர் முரளிதர

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப்)

தொப்பிகல காட்டில் நான் இன்னும் இருந்திருந்தால் இங்குள்ள சிறார்கள் இருந்திருக்க மாட்டார்கள். இன்று அவர்கள் அழிந்து குட்டி சுவராகியிருப்பார்கள். தற்போது நமது இளைஞர்கள் சுதந்திரமாக  நடமாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிரான் பகுதியில் நடைபெற்ற பொதுவைபவமொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமது அரசாங்கம் இன்று பலம் வாய்ந்ததாகவுள்ளது. இதனால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக வருவார். இதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்திலும்  நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மேலதிக ஆதரவினை வழங்கி ஜனாதிபதியின் அன்புக்குரியவர்களாக மாறினால் மேலதிக அபிவிருத்தி வளங்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்கால சந்ததியினருக்கு இன்றைய சுமைகளை அனுபவிக்க இடமளிக்க முடியாது. எனவே நாம் அறிவாளிகளாகச் செயற்பட்டு எல்லோரும் ஒன்று பட்டு செயல்பட்டு கடினமாக உழைத்தால் மாத்திரமே நாம் வளர்ச்சி காண முடியும்.

இன்று எமது பிரதேசம் அபிவிருத்தியில் வளர்ச்சி கண்டு வருகின்றது. 66 ஆயிரம் ஹெக்டேயர் நிலத்தில் 58 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளது. இரு வருடத்திற்கு முன்னிருந்த 80 ஆயிரம் தொன் நெல்லுற்பத்தி மூன்று இலட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோல் மீன், பால் உற்பத்தியிலும் வளர்ச்சி கண்டுள்ளோம்.

இவையெல்லாம் நமது பிரதேசம், அபிவிருத்தியில் வளர்ந்து செல்வதனைக் காட்டுகின்றது. அபிவிருத்தி கண்டால் தானாக எமது உரிமைகளும் எம்மை வந்து சேரும், உரிமை என்று கோசம் எழுப்பி இனி எல்லாவற்றையும் இழக்க முடியாது என பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .