2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா திறப்பதற்கு என்ன தொடர்பு: யு.எல்.எம்.முபீன் கேள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம் .சுக்ரி)

காத்தான்குடி வைத்தியசாலையை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா திறந்துவைப்பதற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கும் காத்தான்குடி வைத்தியசாலைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது.

பிரதியமைச்சரின் ஒரு ரூபாவாவது காத்தான்குடி வைத்தியசாலைக்கு செலவளிக்கப்பட்டுள்ளதா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் கேள்வியெழுப்பி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
காத்தான்குடி தளவைத்தியசாலையின் புதிய கட்டிடம் மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முபீன் மேற்கண்டவாறு தனது அறிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவ்வறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வைத்தியசாலையின் புதிய கட்டிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரிலும் அயராத முயற்சியினாலும் கட்டப்பட்டுள்ளதாகவும் அதை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா திறந்துவைப்பார் எனவும் ஒரு அழைப்பு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது..
இவரது நடவடிக்கை இவ்வாறுதான். தான் செய்யாத ஒன்றை திறந்து வைப்பதும் அதை நான்தான் செய்தேன் என கூறித்திரிவதும் இவரது புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் காத்தான்குடி மீராபாலிகா மகாவித்தியாலயத்தில் எனது முயற்சியினால் நெக்கொட் திட்டத்தின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட கட்டிடமொன்றை தான் கட்டினேன் என திறந்து வைத்தார்.

நான் காத்தான்குடி நகரசபையின் தலைவராக இருக்கின்றபோது காத்தான்குடி வாவியை அண்மித்த பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கழிவகற்றல் திட்டத்தையும் தானே ஆரம்பித்தேன் என கூறினார். இதுபோன்ற பல விடயங்களை என்னால் குறிப்பிடமுடியும்.
இதேபோன்றுதான் சுனாமி அனர்த்தத்தினால் சேதமடைந்த காத்தான்குடி வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் நானே கட்டினேன் என கூறுகின்றார். இவரது செம்புச்சதமாவது இவ்வைத்தியசாலையின் கட்டிடத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ளதா?

இவ்வைத்தியசாலையின் கட்டிட வேலை தாமதம் அடைந்தபோது காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அப்போதைய தலைவராக இருந்த சீ.சீ.சுபைர் மற்றும் சிலரை நான் அழைத்துக்கொண்டு அப்போது கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளாராக இருந்து டாக்டர் ஜெகநாதனிடம் இவ்வைத்தியசாலைக் கட்டிடம் தொடர்பாகவும் இதன் வேலைகளை      துரிதப்படுத்துவது தொடர்பாவும் கதைத்திருக்கின்றேன். இந்நிலையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முபீனையும் இவ்வைத்தியசாலையை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்விற்கு அழைப்பதோடு அவரது பெயரையும் அழைப்பு பிரசுரத்தில் பிரசுரிக்கவேண்டுமென அவ்வைத்தியசாலையின் அதிகாரியொருவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரிடம் கேட்டபோது முபீனுக்கும் இந்த வைத்தியசாலைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களில் சிலர் கேட்டார்களாம்.
நான் கேட்கின்றேன் பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கும் இந்த காத்தான்குடி வைத்தியசாலை புதிய கட்டிடத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கின்றது.

இந்த வைத்தியசாலையின் புதிய கட்டிடம் கட்டப்படும்போது தற்போதைய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எந்த பதவியில் இருந்தார்?
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் நோர்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதியுதவியுடன் இ;வ்வைத்தியசாலை கட்டப்பட்டது என்பது உலகுக்கு நன்கு தெரியும்.

இவ்வைத்தியசாலை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இதற்கு மின்னிணைப்பு பெறுவதற்காக ரான்ஸ்போமரை பெற்றுக்கொடுக்க முடியாத பிரதியமைச்சா,; இதை எனது முயற்சியில் கட்டினேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.
அந்த ரான்ஸ்போமரையும் நோர்வே நாட்டு செஞ்சிலுவைச்சங்கம் 35இலட்சம் ரூபா செலவில் அமைத்துக்கொடுத்துள்ளது.
இவ்வாறு மற்றவர்கள் செய்யும் வேலைத்திட்டங்களில் தான் கையடித்து தான்; செய்தேன் என தம்பட்;டம் அடிப்பது ஆரோக்கியமான அரசியலல்ல.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாகிய நாங்களும் இன்று அரசாங்கத்தை ஆதரித்து ஜனாதிபதியின் ஸ்த்திரத்தை பலப்படுத்த வாக்களித்து விட்டுத்தான் இருக்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Sitheek Monday, 25 October 2010 02:41 PM

    என்ன இது உங்கள் குடும்பத்தின் பணமா ? மக்களின் பணம் தானே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .