2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இடம்பெயர்ந்தவர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களை வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எனப்படும் கபே அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் தற்காலிகமாக வசிப்பவர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வூட்டும்  வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு நெக்டப் கட்டிடத்தில் நடைபெற்றது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் தற்காலிகமாக வசிப்பவர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கபே அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எம்.மனாஸ், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.சஸி,  திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Wednesday, 05 October 2011 07:20 PM

    புலம் பெயர்ந்து அகதி வாழ்வே அந்தஸ்து என நினைப்பவர்கள், மீள வர விரும்புவார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X