2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்,ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் ஏற்பாட்டில் 'ஆரம்பத்தில் கண்டறிதல் உயிரைக் காக்கும்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோயை இல்லாதொழிக்கும் வகையில் சுகாதாரத் திணைக்களத்தால் ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மாத நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தலைமையில் இவ்விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் நடைபெற்றது.

வைத்தியசாலையிலிருந்த ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரினூடாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையை அடைந்தது. இதன் பின் பிரதான மண்டபத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பாத்திபன் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினார். மட்டக்களப்பு நாடக மன்றத்தால் இது தொடர்பான விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .