2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை உட்பட மூன்று பாடசாலைகளுக்கு மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல்லை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று காலை நாட்டி வைத்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர முதுல்வர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட நகர சபை உறுப்பினர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.சுபைர் பாடசாலை அதிபர் யு.எல்.முபாறக் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம், அந் நாசர் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் இந்த மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

புத்து மில்லியன் ரூபா செலவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நிர்மானிக்கப்படவுள்ள இந்த ஆய்வு கூட கட்டிடத்தில் விஞ்ஞான ஆய்வு கூடம், தகவல் தொழிநுட்பம், மற்றும் கணித, ஆய்வு கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X