2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாட்டைப் பிரிக்குமாறு கோரவில்லை: சம்பந்தன்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

நாட்டைப் பிரிக்குமாறு தாங்கள் கோரவில்லை. ஆனால், கௌரவமாக சுயமரியாதையுடன் பாதுகாப்பாக தங்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி சமத்துவமான மக்களாக தாங்கள் வாழ விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக  சனிக்கிழமை (08) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மேலதிகமாக எதையும் நாங்கள் கேட்கவில்லை. இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, சுதந்திரமாக எவ்வித தடையும் இன்றி சமஷ்டி அடிப்படையில் தீர்வை ஏற்படுத்துமாறே வலியுறுத்தியுள்ளோம்' என்றார்.

'எமது தமிழ் மக்களுடைய அன்றாட விடயங்களில்; பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் ரீதியான விடயங்கள் தொடர்பாக இணைந்த வடகிழக்கில் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு,  இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அடிப்படையிலும் 13ஆவது திருத்தத்தின் ஊடாகவும் வடக்கு கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். அது அரசியல் அலகாக இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் கூறியுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .