2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மரபுரிமை மிக்க இடங்களை பார்வையிட படகுச் சவாரி

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு நகரின் மரபுரிமை மிக்க இடங்களை பார்வையிடும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதி பாலமீன்மடுவில் படகுச் சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து வரும் உல்லாசப் பயணிகள்  படகினில் சவாரி செய்து கல்லடிப்பாலம், டச்சுக் கோட்டை, காந்தி; பூங்கா உள்ளிட்ட மரபுரிமை மிக்க இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன், பறவைகள்  சரணாலயம் அமையப்பெற்ற புறாத்தீவு, பாலமீன்மடு போன்ற இடங்களையும் பார்வையிடுகின்றனர்.

பாலமீன்மடுவில் ஆரம்பிக்கும் படகுச் சவாரி மட்டக்களப்பு கேற்றை வந்தடைந்து, புறாத்தீவு உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக படகு ஓட்டிகள் ஒரு படகுக்கு 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய்வரை அறவிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .