2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

22 டெங்கு நோயாளர்கள்: சிறுமி உயிரிழப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகர சபை பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல்; மார்ச் மாதம் வரைக்கும் 22 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒரு சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாகவும் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகரசபை ஏற்பாடு செய்த டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் திங்கட்கிழமை(7) காத்தான்குடி நகரசபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே காத்தான்குடி நகர சபை தலைவர் மேற் கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'காத்தான்குடியில் டெங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதிலும் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 22 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மற்றும் புதிய காத்தான்குடி பகுதிகளிலேயே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய காத்தான்குடி பகுதியிலேயே டெங்கினால் சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளார். 

டெங்கு நுளம்பை ஒழிப்பதன் மூலம் டெங்கு பரவுவதை தடுக்க முடியும். இதற்காக வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல், வெற்றுக்காணிகள், வீட்டுக கிணறுகள் என்பன சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படும் வீட்டு உரிமையாளர்கள், காணிகளின் உரிமையாளர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என்று தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .