2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

’அக்குறணை குப்பை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு’

மொஹொமட் ஆஸிக்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குப்பைகளை அகற்றும் பிரச்சினைக்கு, 350 இலட்சம் ரூபாய் செலவில் நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளதாக, அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயல்காமம் பிரதேசத்தில், குப்பைகள் குவிந்து வந்த பூமியைப் புனர்நி​ர்மாணம் செய்து, அங்கு பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை எரிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட இயந்திரத்தை பார்வையிட,  நேற்று (25) சென்றிருந்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், அக்குறணை பிரதேச சபை எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைகளில், குப்பைப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக இருந்தது என்றும் இதனால், இயல்காமம் பிரதேச மக்கள், பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர் என்றும் கூறினார்.

இந்நிலையில், அவர்களுக்குத் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் படி, குப்பைப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வழங்கவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .