2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் அரிசியின் விலை துரித ஏற்றம்

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும்  அரிசியின் விலை, துரிதமாக அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிவப்புப் பச்சரிசி கிலோகிரா​ம், 95 ரூபாய்க்கும் 65 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளைப் பச்சரிசி 92 ரூபாய் முதல் 95 ரூபாய் வரையும், 70 ரூபாய்க்கு விற்பனையான நாட்டரிசி, 103 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசாங்கம், அரிசி வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை விதித்துள்ள போதிலும், தமக்கு குறைந்த விலையில் அரிசியைக் கொள்வனவு செய்யக்கூடிய இடங்கள் இல்லையென, வியாபார நிலைய உரிமையாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலையில் பொருள்களை விற்கும் வியாபாரிகளைத் தேடிப்பிடித்து, நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் அபராதம் விதிக்கின்ற போதிலும், அபராதத்தைச் செலுத்தி விட்டு, மீண்டும் பழையபடி அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யும் இடத்தை அறிமுகப்படுத்தினால்,  தம்மால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .