2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 13 பேர் மரணம்

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

2019ஆம் ஆண்டு எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் பலியாகியுள்ளனர் என்றும் இவர்களில் 4 பேர் எம்பிலிப்பிட்டிய சுகாதார நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் காரியாலய அதிகாரிகள், நேற்று (20) தெரிவித்தனர்.

இப்பிரிவில் பனாமுர, ஜந்துர, நிந்தகம்பெலஸ்ஸ, மடுவன்வெல ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமாகியுள்ளனர் என்று,  வைத்திய அதிகாரி காரியாலய தகவல் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் இந்நோய்க் குறித்த அவதானம் தொடர்ந்து நிலவுவதால், பிரதேச பொதுசுகாதார அதிகாரி காரியாலய மட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை, எலிக் காய்ச்சல் கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் வழிகாட்டலில், சுற்றாடல் சுத்திகரப்பு மட்டுமன்றி, பொது வேலைத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X