2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரியின் பவள விழா

Sudharshini   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரியின் பவள விழா, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் கொண்டாடப்படும் என்று கல்லூரியின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

'75ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட உள்ளது' என அதிபர் ரணில் மீடியாகொடை தெரிவித்தார்.

இப்பாடசாலை 1940ஆம் ஆண்டு ரொபர்ட் எம் பெரோ என்ற மதகுருவை அதிபராகக் கொண்டு 12 ஆசிரியர்கள் மற்றும் 250 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல்லின மாணவர்களையும் தன்னகத்தே உள்வாங்கி இன ஒற்றுமைக்கு அடித்தளமிட்ட  ஒரு பாடசாலையாக திகழ்கின்றது.

இப்பாடசாலையில் தற்போது 3,500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .