2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொரோனா பீதி; தேசிய ஔடதங்களுக்கு கிராக்கி அதிகம்?

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார   

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பீதியை அடுத்து, மரமஞ்சள் கட்டை உள்ளிட்ட தேசிய ஔடதங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாத்தளை நகரில், ஒரு கிலோகிராம் மரமஞ்சள் கட்டை 500 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.  

மரமஞ்சள் கட்டைக்குப் பதிலாக பல்வேறு மரக்கட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

லக்கல தேர்தல் தொகுதியில், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொரோனா தொற்றுத் தொடர்பில் உரியமுறையில் மக்களைத் தெளிவுப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும் இதனால் மக்கள் கடைகளுக்குச் சென்று, பெருங்காயம், கொத்தமல்லி, மரமஞ்சள் கட்டைகளைத் தேடி அலைகின்றனர் என்றும் அதிக விலைக் கொடுத்து அவற்றைக் கொள்வனவு செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.   

குறைந்தது முகக் கவசங்களையாவது பெற்றுக்கொள்ள கடைகளில் முகக்கவசங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X