2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்விசார ஊழியர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்க கோரிக்கை

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொமட் ஆஸிக்

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் விடயத்தில், கல்வித்துறையில் சேவையாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு, முறையான தீர்வு வழங்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கல்வித்துறைசாரா  ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.  

இது தொடர்பில், அச்சங்கத்தின் செயலாளர் அஜித் கே.திலகரத்ன, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு அனுப்பியுள்ள அவசரக் கடித்ததில் மேலும் கூறியுள்ளதாவது,   
“2018ஆம் ஆண்டில், அரச பாடசலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்று நிரூபத்தின் மூலம், கல்வித்துறையில் சேவையாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு, அநீதி இழைக்கப்பட்டுள்ளது.   

கல்வித்துறையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்தையின் காரணமாக, கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து கல்வித் துறையில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களது குழந்தைகளுக்கு முதலாம் தரத்துக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டது.   

அதுவரை, கல்வித்துறை ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நான்கு சதவீத கோட்டா, ஐந்து சதவீதமாக உயர்த்தப்பட்டதன் மூலம், கல்விசாரா ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.  

கஷ்டப் பிரதேச பாடசலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25 புள்ளிகளும் மற்றவர்களுக்கு 15 புள்ளிகளும் வழங்க, இந்தச் சுற்றுநிரூபத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டன. இது பாரிய குறைபாடாகும். ஏனெனில், கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் சேவை செய்ய வாய்ப்புக் கிடைக்காதவர்கள் இதன்மூலம் பாதிப்படைவர்.  

இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அமைச்சின் செயலாளருடன் நடத்திய கலந்துரையாடலின்போது, கல்வி அமைச்சின் செயலாளர் இப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுத்தருவதாகவும் சுற்று நிரூபத்திலுள்ள பிரச்சினையை நீக்குவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். ஆனால், இம்முறையும் அது நிவர்த்திசெய்யப்படவில்லை.   

எனவே, இவ்விடயத்தில் கல்வியமைச்சு விரைவில் தீர்வொன்றைத் தர வேண்டும்.  
கல்விசார ஊழியர்களின் பிரச்சினைக்கு, நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிவரும்” என்று, அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .