2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்கந்த தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்

Sudharshini   / 2016 மே 30 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மஸ்கெலியா, கார்மோர் கல்கந்த தோட்டத்தில் மண்சரிவு காரணமாக  இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

'தோட்ட நிர்வாகம், வீடமைப்புக்கான பொருத்தமான இடத்தை தருவதாக கூறியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தும்' என அமைச்சர் பழனி திகாம்பரத்தின் இணைப்புச் செயலாளர் நகுலேஸ்வரன்; தெரிவித்தார்.

கார்மோர், கல்கந்த பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (29) விஜயமொன்றை மேற்கொண்டு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்களை வழங்கி வைக்கும்போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது, 10 தற்காலிக கூடாரங்கள் 525, கூரைத்தகடுகள் மற்றும் உலருணவு பொருட்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .