Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் நகரிலுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு வருகைத் தருவோரின் விவரக்கோவையை, நாளாந்தம் நகரசபைக்கு வழங்குமாறு, ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் ஆர்.பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றுத் தொடர்பில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் விவரம் திரட்டப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் - டிக்கோயா நகரசபை சபையும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளின் தகவல்களைத் திரட்டுவதற்காக நகரசபையால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சுற்றுலா விடுதிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago