2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாமஸ் பிரிவு மக்களை அச்சுறுத்தும் கற்பாறை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொட்டகலை, மேபீல்ட் தோட்டம் சாமஸ் பிரிவு பகுதியிலுள்ள குடியிருப்புகள் மீது பாரிய கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் இயங்கிவரும் கல் குவாரியின் மேற்பகுதியிலிருந்து குறித்த தோட்டப்பகுதியிலுள்ள குடியிருப்புகள் மீது பாரிய கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாக தோட்ட நிர்வாகம், சுற்று சூழல் அதிகார திணைக்களத்துக்கும் தேசியக் கட்டட ஆய்வு மையத்துக்கும் முறையிட்டிருந்தது.முறைப்பாட்டுக்கமைய  குறித்த பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன்போதே கல் குவாரியிலிருந்து மேற்படி தோட்டத்துக்குள் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதென உறுதி செய்யப்பட்டது.  

இதனையடுத்து, குவாரியின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொட்டகலை ஆகீல் தோட்டத்திலுள்ள கல் குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிகள் காரணமாக இப்பகுதியிலுள்ள வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது தோட்டத்தின் உதவி முகாமையாளரையும் அதன் அருகில் காணப்படும் தவரணையில் பணிபுரியும் ஊழியர்களையும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

குறித்த கற்பாறைகளை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திம்புள்ள- பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கே.பி.பி.சுபசிங்க தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கற்பாறை எந்நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளதால், குறித்த தோட்டத்துக்குச் செல்லும் பாதை மற்றும் அப்பகுதியிலிருந்து செல்லும் பிரதான வீதிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .