2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

த.தே.கூவின் தீர்மானத்துக்கு கூட்டணி வரவேற்பு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்துள்ள நிலையில், அந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, கூட்டமைப்பு சமூக பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளது.

இது குறித்து, கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், நேற்று (11) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதைத் தவிர்த்து, சமூக பொறுப்பை த.தே.கூ, சரிவர நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பி மனோ கணேசன், வெறுமனே கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்லர் என்றும் அவர் தேசிய தலைவர்களில் ஒருவர் என்பதை,  த.தே.கூ நன்கு புரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாக்குகள் பிளவு படுவதைத் தடுத்து, மனோவின் வெற்றியை உறுதிப்படுத்திடுவதற்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் களம் இறங்குவதைத் தவிர்த்துக்கொண்டுள்ளதாகவும் அதன்மூலம் தமது சமூக பொறுப்பை, கூட்டமைப்பு சரிவர நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது வடக்கு-தெற்கு உறவை, மேலும் பலப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .