2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

“நல்லாட்சி அரசாங்கத்தால் மலையகம் அபிவிருத்தியடைகின்றது”

Kogilavani   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

“நல்லாட்சி அரசாங்கத்தினால், மலையகமானது, பல்வேறு வழிகளிலும் அபிவிருத்திக்கண்டு வருகின்றது”  என்று கூறிய மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், “வெறும் வாய்வார்த்தைகளிலிருந்த அபிவிருத்தித் திட்டங்கள்  தற்போது, செயல்வடிவம் கண்டுள்ளது” என்றும் கூறினார்.

ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் மற்றும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வு, கொட்டகலையில் நடைபெற்றது. பிரஜா சக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

“எமது நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் அமைச்சர் பா.திகாம்பரத்தின்  வழிகாட்டலின் கீழ், மலையகத்துக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், தற்போது துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையக மக்களின் வாழ்வை மாற்றி, அவர்களையும் நாட்டின் அபிவிருத்தியோடு இணைத்து வருகின்ற காலகட்டம் இதுவாகக் காணப்படுகின்றது. எமது மலையக மக்கள் அளித்த வாக்குகளுக்கு பரிகாரமாக,  மலையகத்துக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், முன்னொரு காலமுமில்லாதவாறு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தனி வீட்டுத்திட்டங்கள், பாதை அபிவிருத்தி, குடிநீர் வசதியை மேம்படுத்தல், சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், சுயதொழிலுக்கான ஊக்குவிப்பு, சமய வழிபாட்டுத்தலங்களின் அபிவிருத்திப் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், மலையக மக்களுக்கு தெளிவூட்டப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .