2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’நுவரெலியாவில் சஜித் வெல்வதற்கு திகாம்பரமே காரணம்’

ஆ.ரமேஸ்   / 2019 நவம்பர் 19 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் முற்போக்குக் கூட்டணியால் ஆதரவளிக்கப்பட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, நுவரெலியா மாவட்டத்தில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தமைக்கு, அமைச்சர் பழனி திகாம்பரமே காரணம்என, தொழிலாளர் தேசிய சங்க நிர்வாக பொறுப்பாளரும் ஹட்டன் டிக்கோயா நகரசபை முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் தெரிவித்தார்.

நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஐ.தே.கவின் பங்காளிக் கட்சியாக இருந்து வரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரான பழனி திகாம்பரம், மலையக பெருந்தோட்ட மக்களின் சமூக மாற்றத்துக்காக, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததுடன், தனி வீட்டு அபிவிருத்தித் திட்டம், கிராம அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததாகக் கூறினார்.

அதேநேரத்தில், எதிர்வரும் காலத்திலும், இந்த அபிவிருத்தித் திட்டத்தை விருத்திக்கும் வகையில், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்ய, அவருக்கு வழங்கிய தேர்தல் பொறுப்புக்களை, அமைச்சர் சரிவரச் செய்தார் என்றும் அவர் கூறினார்.

அந்த வகையில், நுவரெலியா மாவட்டத்தில் சஜீத் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்ட 2 இல்சத்துக்கு அதிகமான வாக்குகள், அமைச்சர்  பழனிதிகாம்பரத்தின் முயற்சியின் பலனாகவே கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X