2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

1,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Sudharshini   / 2016 மே 22 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மேலும் 1,000 பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில்; கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களுக்கு  வெற்றிடம் காணப்படவதால், அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கு சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் கடந்த மாதம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கமைய, இம்மாதம் 24, 25, 26ஆம் திகதிகளில் நேர்முகப்பரீட்சை நடடைபெறவுள்ளது.. இதற்கான நேர்முக கடிதங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.       

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளை நோக்காகக் கொண்டு விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற துறைகளுகளில் கல்வி கற்பிப்பதற்கு விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .