2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதைக்கு எதிரான இலக்கு: எம்பிலிப்பிட்டியவுக்கு முதலிடம்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இலங்கையில், போதைப்பொருள் உற்பத்தி நிலையங்களைத் தேடிக் கண்டுபிடித்து, போதை எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முயற்சிகளில், எம்பிலிபிட்டிய கலால் பிரிவு, முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கலால் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் இப்போட்டியில், 2019ஆம் ஆண்டு நடத்திய மேற்படி வேலைத்திட்டத்தின்போது, ஒவ்வொரு அதிகாரப் பிரதேசத்திலும்,  குறைந்தது 100 போதைக்கு எதிரான தேடுதல்கள் அல்லது கண்டுபிடிப்புகள் நடைபெற்றிருக்கவேண்டும் என்று இலக்குகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் எம்பிலிப்பிட்டிய கலால் போதைத் தடுப்புப் பாதுகாப்புப் பிரிவு, 2019ஆம் ஆண்டு, 144 போதை விற்பனை நிலையங்களைக் கண்டுபிடித்து முற்றுயிட்டு, முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, குறித்த பிரதேசத்தில் கள்ளச்சாராயம், கசிப்பு போன்ற சட்டவிரோத உற்பத்திகளும் அதனது வியாபாரங்களும் கணிசமான அளவு குறைந்துள்ளதாக, மக்கள் தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X