2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பனிமூட்டம்: சாரதிகள் அவதானம்

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்சியாக மழை பெய்கின்றது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்திருந்தாலும் நேற்றும் இன்றும் இடைக்கிடையே மழை பெய்து வருவதை காண முடிகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதோடு காலநிலை சீர்கேடாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதோடு தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடுமையான வெயில் காரணத்தினாலும்இ பனி பொழிந்ததாலும் தேயிலை செடிகள் கருகி தோட்ட தொழிலாளர்கள் வேலை அற்ற நிலையில் வாரத்தில் இரண்டு அல்லது நான்கு நாட்கள் தொழிலை மேற்கொண்டு வந்தனர்.

தற்பொது தேயிலை செடிகள் செழிப்பமாக இருப்பதோடு கொழுந்து விளைச்சலும் அதிகமாகவே அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் தொழிலாளர்கள் கொழுந்தினை பறிக்க முடியாத நிலையில் காலநிலை காணப்படுகின்றது.

தொழிலாளர்கள் கடந்த காலங்களில் தொழில் இல்லாமல் வறுமை ரீதியாகவும்இ பொருளதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இவர்கள் தற்போது தோட்ட நிர்வாகம் அதிகமான நாட்கள் வெலை வழங்கினாலும் காலநிலை பாதிப்பால் தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அட்டனிலிருந்து நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதோடு நுவரெலியா நகரம் பனிமூட்டம் படர்ந்த பகுதியாகவே அதிகாலையில் காட்சியளிக்கின்றது.

அத்தோடு, காற்றும் வீசப்படுகின்றது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதனால் வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்குவதோடு அவ்வப்போது சாரதிகளுக்கு அறிவுறுத்தல்களையும் போக்குவரத்து பொலிஸார் வழங்கி வருகின்றனர்.

மேலும், மலையக பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளில் ஆங்காங்கே தாழ்யிறக்கம் காணப்படுவதனால் அப்பகுதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நானுஓயா நகரத்திலிருந்து நுவரெலியா செல்லும் பாதையில் பங்களாஅத்த மார்க்கத்தில் பாரிய வெடிப்பு பாதையில் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் வீதி அதிகார சபையின' ஊடாக பாதுகாப்பு சமிஞைகள் போடப்பட்டுள்ளது. இதேவேளை நுவரெலியா கிரகரி வாவிக்கு அண்மித்த பகுதியில் பதுளை செல்லும் பிரதான வீதியில் சிறியளவிலான குழி ஒன்று காணப்படுவதனால் வாகன சாரதிகளை அவதானமாக செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .