2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரேரணைக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பிரதேச சபை உறுப்பினர்களது மாதாந்தக் கொடுப்பணவை அதிகரிக்குமாறு வலியுறுத்தி, பூஜாபிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எஸ்.எம்.கலீலால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, அச்சபையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜாபிட்டிய பிரதேச சபையின் அமர்வு, அதன் பதில் தவிசாளர் ஏ.எல்.எம்.ரஸான் தலைமையில், பிரதேச சபையின் அலுவலகக் கேட்போர் கூடத்தில், இன்று (11) நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என்றக் கோரிக்கை அடங்கிய பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய மேற்படி உறுப்பினர், தற்போதைய நிலையில், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதில்லை என்று குறிப்பிட்டதோடு, இத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பணவும் 4,000 ரூபாய் தொலைபேசிக் கொடுப்பணவும், இன்றையச் சூழலில் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், எனவே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பணவை 15,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார்.

ஏனைய உறுப்பினர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும் இந்தப் பிரேரனைக்கு சபையின் உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .