2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாடசாலையின் தீர்மானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை மடவல உல்பத நவோதைய வித்தியாலத்தில் உயர்தரத்தில் கல்விக் கற்றுவரும் மாணவர்களை, வேறு பாடசாலையில் இணைத்துக்கொள்வது தொடர்பில், பாடசாலை நிர்வாகம் மற்றும் மாத்தளை வலயக் கல்விப் பணிமனையும் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, பாடசாலை மாணவரின் பெற்றோர் மடவளை நகரில் திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலையில் 2017 ஆம் ஆண்டு முதல் உயர்தரக் கற்கைநெறி நிறுத்தப்படவுள்ளதுடன் இப்பிரிவில் தற்போது கல்விக் கற்றுவரும் மாணவரை மாத்தளை நகரிலுள்ள வேறு பாடசாலைகளில் இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலையின் இச்செயற்பாட்டினால் மாணவர்களின் கல்வி  நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி மாணவரின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி ஏ9 வீதியில்  வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இவ்விடயம் தொடர்பில் மாத்தளை வலயக் கல்விப் பணிமனையில் பணிப்பாளர் மஹிந்த எஸ்.யாபாவிடம் வினவியபோது,

'இப்பாடசாலையின் உயர்தர பிரிவில் ஆறு மாணவரே கல்விப் பயின்று வருவதுடன் மாணவருக்கிடையில் போட்டித் தன்மை குறைவடைந்து காணப்படுவதால் உயர்தர பிரிவை நிறுத்துவதற்கும் மேற்படி மாணவரை மாத்தளை நகரிலுள்ள பாடசாலைகளில் இணைப்பதற்கு தீர்மானித்தோம். எனினும், மேற்படி மாணவர் இப்பாடசாலையிலே உயர்தரத்தை கற்க வேண்டுமென விரும்பினால் அதற்கு ஆட்சேபனையில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .