2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெட்டிகல தோட்ட மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 மே 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

பலாங்கொடை, பெட்டிகல தோட்டத்தில் மண்சரிவு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ள 46 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு, நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இம்மக்களின் வீடமைப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சர் ப.திகாம்பரத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேற்படி தோட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர், வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் தோட்ட வைத்தியசாலை, தற்காலிக கூடாரங்கள்,  பாடசாலை என்பவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

இவர்களை இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை(24) சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே, இம்மக்களுக்கு வீடுகள் அமைத்துகொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் வாக்குறுதியளித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட  குடும்பங்களை சேர்ந்த மாணவருக்கு, பாடசாலை சீருடை, கற்றல் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .