2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு பதவி வழங்க வேண்டும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு தாங்கள் வசிக்கும் தோட்டத்திலேயே பதவியும், பதவிக்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டுமென இ.தொ.கா பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற  உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், தோட்ட நிர்வாகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர், விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பெருந்தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்குப் பெருந்தோட்டங்களிலேயே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

தகுதியும், தகைமையும் கொண்ட இளைஞர்களையும், யுவதிகளையும் புறக்கணித்துவிட்டு, வெளிப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களுக்கு இந்த வாய்ப்பைத் தாரைவார்த்துக் கொடுக்கக் கூடாது.

பெருந்தோட்டப் பகுதிகளில் இளைஞர்களும், யுவதிகளும் தொழிலாளர்களாக பதியப்படுகின்றனர். அதேவேளை, படித்தவர்களுக்கு பதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. இவர்கள் ஓரம் கட்டப்படுகின்றார்கள், இது கூட்டு ஒப்பந்த உடன்பாட்டுக்கு குந்தகமான செயலாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், படித்த இளைஞர்களும் யுவதிகளும் தொழில் வாய்ப்பை இழக்கின்றார்கள். இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகின்றது. தொழில் வாய்ப்பு கிடைத்து, தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வரை, வறுமைப்பிடியில் சிக்குவது மட்டுமல்ல வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கும் சுமையாகி விடுகின்றார்கள். இது சமூக மட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, இந்த நிலை மாற வேண்டும்.

தோட்டப் புறங்களில் தொழிலாளர்கள் சமயா சமய தொழிலாளர்களாக இன்று அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாகக் கணிக்கப்படுவதில்லை. இதனால், ஊழியர் சேமலாபநிதி, சேவைக்காலப் பணம், ஓய்வூதியம் ஆகியன அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றன. இது தோட்டத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒரு உள்நோக்கம் கொண்ட செயற்பாடாகும்.

தோட்டப் புறங்களில் தொழிலாளர்களி;ன் வாழ்க்கை நிலை காலத்துக்கு ஏற்;றவாறு இன்னும் விருத்தி அடையவில்லை. சுகாதாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. தண்ணீர் வசதிகளோடு மலசலகூடங்கள் அமைக்கப்படவில்லை. இவையாவும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை மேற்கொள்வதற்கு இ.தொ.கா நடவடிக்கை எடுத்துள்ளது' என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .