2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மகாத்மா காந்தியின் சர்ச்சைக்கு உடன் தீர்வு

Kogilavani   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா-  கிளங்கன்; வைத்தியசாலைக்கு 'மகாத்மா காந்தியின்' பெயரை சூட்டுவது தொடர்பிலும் வைத்தியசாலையை வைபவ ரீதியாக திறப்பது குறித்தும் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு, அமைச்சின் ஊடாக நேரடி தீர்வுகளை பெற்றுக்கொள்வதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறுமெனவும் அவர் கூறினார். இலங்கை தொழிலாளர் சங்கத்தின் ஹட்டன் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

அங்கு அவர் தொடரந்து தெரிவிக்கையில், 'கிளங்கன் வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவினால் கட்டப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலைக்கு இந்தியா மற்றும் இலங்கை வாழ் மக்களால், போற்றப்படும் மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும். இதைவிடுத்து மத்திய மாகாண சபையில் வைத்தியசாலைக்கான பெயர் சூட்டல் தொடர்பிலும் அதன் திறப்புவிழா தொடர்பிலும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் நியாயமில்லை.

எனவே, இவ்விடயம் குறித்து  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க குழுவொன்றை நியமித்துள்ளோம், ஓரிரு நாட்களில்; இதற்கு தீர்வு எட்டப்படும்' என்றார்.

'இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் சமாதான நீதவான்களின் சிபாரிசு கடிதங்களை பெறுவதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்க தோட்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும்; படித்த இளைஞர், யுவதிகளுக்கு எதிர்வரும் காலங்களில் சமாதான நீதவான் பதவிகளை வழங்க வேண்டும் என நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .