2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

“மண்சரிவு குறித்து அவதானத்துடன் இருக்கவும்”

ஆ.ரமேஸ்   / 2017 மே 29 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


“அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை தொடருமாயின், நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட ​அம்பேகமுவ, கோரள ஆகிய பிரதேச செயலகங்கள் மண்சரிவு அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, நிலச்சரிவான பிரதேசங்களிலுள்ள மக்கள்இ இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், தொடர் மழை பெய்யுமாயின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், நுவரெலியா இடர்முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி எம்.பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, அம்பேகமுவ, வலப்பனை, நுவரெலியா ஆகிய உதவி அரசாங்க பிரிவுகளில், காற்றுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்து வருகின்றது.

மின்கம்பங்கள் நாட்டப்பட்டுள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள், கடுமையான காற்று வீசும் வேளையில், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு அருகில் காணப்படும் மின்கம்பங்களின் மின்னிணைப்புகளில் ஏதாவது கோளாறுகள் ஏற்படின், அப்பகுதி மின்சார சபைகளுக்கு உடனடியாக அறிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .