2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாத்தளை மாநகர சபை அமர்வில் சலசலப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மஹேஸ் கீர்த்திரத்ன

 

மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹார, வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பதில் மேயரான சந்தனம் பிரகாஷ் தலைமையில், இன்று  (26) நடைபெற்ற சபை அமர்வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சபையின் மக்களின் விடுதலை முன்னணியின் உறுப்பினர் மொஹமட் நிஹால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான ஏ.என்.இந்திரரத்ன, ரந்திக வீரசிங்க, சரத் ஜாதுங்க ஆகியோரால் முன்வைக்கப்பட்ட 06 பிரேரணைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மேற்படி சபையின் அமர்வு நேற்று (26) நடத்தப்பட்டது.

இந்நிலையில்  செங்கோல் இன்றியும் சபை முதல்வருக்கான மேல் ஆடையை அணியாமலும்  ​பதில் மேயர் சந்தனம் பிரகாஷ் சபைக்கு வருகைத் தந்திருந்தார் என்றும் இதனால் இந்த அமர்வு சட்டத்துக்கு முரணானதெனத் தெரிவித்த சபை உறுப்பினர்  அனாஸ் ரியால், சபை  ஒத்திவைப்புப் பிரேரணையை கொண்டுவந்தார் என்றும் தெரியவருகிறது.

அந்தப் பிரேரணையை சபை உறுப்பினரான  எம்.சபருள்ளா வழிமொழிந்த போதிலும் அந்த அமர்வு சட்டத்துக்கு அமைவானது எனத் தெரிவித்து  சபையின் ஓழுங்கு பத்திரத்திலுள்ள விடயங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொளுமாறு பதில் மேயர் அறிவித்துள்ளார்.

சபை அமர்வின் இடைநடுவில் சபை உறுப்பினரான மொஹமட் அனாஸ் ரியால், பதில் மேயர் சந்தனம் பிரகாஷ் ஆகியோருக்கிடையில் கார​சாரமான  வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் இதனால் சபை அமர்வில் சலசலப்பு ஏற்பட்டதாகவும்  தெரியவருகிறது.

மாத்தளை மாநகர சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான நகரசபை ஆணையாளரை சாரதியொருவர் திட்டித்தீர்த்தமை, சபைக்குச் சொந்தமான சிறுவர் பூங்காவை முறையாகக் கையளிக்காததால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு, சபையின் தீர்மானங்களுக்கு எதிரான முறையில் கொங்காவெல பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொடுத்தல்,  ஊழியர் நியமனத்தால் சபையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை,  சொகுசு வியாபார கட்டடத்தொகுதியின் 33 கடைகள் பற்றிய விடயம், மாத்தளை தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடடைகளை அகற்றிவிட்டு மீண்டும் அவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தமை உள்ளிட்ட பிரேரணைகள் குறித்து ஆராய்வதற்காகவே சபை அமர்வு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் காரசாரமான விவாதங்களுக்குப் பின்னர் மேற்படி பிரேரணைகள், 10 மேலதிக வாக்குகளால் நிறைவேறியதாக,  சபையின் பதில் மேயர் சந்தனம் பிரகாஷ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .