2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மே 1ஆம் திகதி திலகர் பகிரங்க அறிவிப்பு

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய அரசயில் பயணம் குறித்து, மே மாதம் 1ஆம் திகதியன்று, பகிரங்க அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

மார்ச் 12 இயக்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் 19ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பாக நுவரெலியா, கண்டி, பதுளை, கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களிலுள்ள 10 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஏனைய மாவட்டங்களில் வேட்பாளர் தெரிவு இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்ணியின் தலைவர். வே.ராதாகிருணணன் ஆகியோர் போட்டியிடுவது உறுதிபடுத்தப்பட்டுள்ன.

இந்நிலையில், மூன்றாவது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அல்லது முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமாரா ஆகிய இருவரில் யார் தெரிவு செய்யப்படுவர் எனும் விடயம் இழுபறியில் உள்ளது.

உதயகுமார் வேட்பாளராக போட்டியிடவும் திலகராஜுக்கு தேசிய பட்டியல் வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவு​ம் அறியமுடிகின்றத.

வேட்பாளர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .