2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரட்சியால் தேயிலை, மரக்கறிச் செய்கைப் பாதிப்பு; மானியம் வழங்குமாறு வேண்டுகோள்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான வானிலை காரணமாக, தேயிலை, மரக்கறிச் செய்கைகள் பாதிப்படைந்துள்ளதால், தேயிலைச் செய்கையாளர்கள், விவசாயிகள் பாரிய பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி நிவித்திகல நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இரத்தினபுரி மாவட்டத்தில், ஒன்றரை மாதங்களாக நீடித்துவரும் வரட்சி காரணமாக, தேயிலைத் தோட்டங்கள் மட்டுமன்றி, மரக்கறிச் செய்கைகளும் பாதிப்படைந்துள்ளன என்றும் சில பகுதிகளில் மரக்கறிச் செய்கைக்கான காணிகள் வறண்டு காணப்படுகின்றன என்றும், விளைச்சல் குறைந்து, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்காரணமாக, இரத்தினபுரி பிரதேச பிரதேச விவசாயிகள், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எனவே அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கு, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .