2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெற்றிலைகளில் கரும்புள்ளி உற்பத்திப் பாதிப்பு

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

வெற்றிலைகளில் ஒருவித கரும்புள்ளி ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவதாக, பலாங்கொடை பிரதேச வெற்றிலை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் வெற்றிலை நுனியில் ஏற்படும் கரும்புள்ளி, பின்னர் வெற்றிலை முழுவதும் பரவி பின்னர், அவை உதிர்ந்து கீழே விழுவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலைமையால் வெற்றிலை உற்பத்தி பாதிப்படைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் கமநல, விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை தமக்கு உரிய தீர்வுகளோ போதிய அறிவுறுத்தல்களோ இதுவரை கிடைக்காமையால் தாம் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .