2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'வற் தொடர்பில் விளக்கமளிக்கவும்'

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

வற் (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு உரித்துடையதா என்பதை மலையகம் சார்ந்த சட்டத்தரணிகள் தெளிவுபடுத்தவேண்டும் என  மலையக தொழிலாளர் முன்னணியின் மாநில நிர்வாக இயக்குனர் எஸ்.வரதராஜன்  தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

'அரசாங்கம் ஏனைய தொழிற்துறை சார்ந்தவர்களுக்கு அறிவித்த 2,500 ரூபாய் அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நாம் குரல் கொடுத்தபோது இதனைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட சரத்துக்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு இல்லை என்றும் அது திட்டமிட்டு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையைத் தடுப்பதற்காகவே என்றும் சட்டரீதியான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் சம்பள அதிகரிபபுக்கு உரித்தில்லாதவர்கள் விலைவாசி அதிகரிப்புக்கு மட்டும்  எப்படி உரித்தாகுகின்றார்கள் என்பதை இவர்கள் சட்ட சரத்துகளுடன் விளக்கினால் அதனை நாமும் விளங்கிக் கொள்ளலாம்.

சுமைகள் சுமத்தப்படும்போது எந்தவித வேறுபாடுகளுமே இன்றி தோட்டத் தொழிலாளர்களின் மீது சுமத்தப்படுகின்றது. அதேவேளை, ஏதாவது சலுகைகளுக்காக நாம் கோரிக்கை விடுத்தால் அதற்கு உடனடியாக தொழிற்;சங்க சாயம் பூசப்பட்டு எம் சமூகம் சார்ந்தவர்களின் எதிர்பபுக்கும் அது உட்படுகின்றது.

ஆகவே, தொழிற்சங்கங்கள் என்பதை சந்தாப் பணத்துடனும் கட்சி பெயர்களுடன் மாத்திரம் அடையாளப்படுத்திக் கொண்டு தொழிலாளர்களின் நலன் என்று வரும்போது பேதங்களை ஒதுக்கிவிட்டு நாம் இணைந்து செயற்படவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .