2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வளங்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது

Sudharshini   / 2015 நவம்பர் 15 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக வளங்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை ஒன்று தற்போது உருவாகியுள்ளது என்று  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரத்தின் 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நானுஓயா எபோட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்துக்கு புதிய கட்டடத்துக்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டப்பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகள் பல போதிய கட்டட வசதிகளின்றி காணப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசாலை நிர்வாகங்களும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த காலங்களில்,  மலையக மக்கள் பிரதிநிதிகளிடம் பாடசாலை நிர்வாகங்களினால்  வேண்டுகோள் விடுக்க முடியாத அரசியல் நிலைமை காணப்பட்டது. புதிய ஆட்சியின் ஊடாக தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்படுகின்ற வேண்டுகோளை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்து தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .