2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி மாணவர் தேர்வில் குளறுபடிகள் இல்லை'

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

'ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் மாணவர்கள் தேர்வில்,  எந்தவிதமான குளறுபடிகளும் இடம்பெறவில்லை. அனைத்தும், வர்த்தமானி அறிவித்தலின்படியே நடைபெற்றுள்ளன. இந்தத் தேர்வுகள் தொடர்பாக எந்த நேரத்திலும் யாரும் பரீட்சித்துப் பார்க்க முடியும் என, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி தன்னிடம் தெரிவித்தார்' என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

'ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில், அண்மையில் மாணவர்கள் இரண்டாம் கட்டமாக உள்வாங்கியபொழுது, பெருந்தோட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நான், பீடாதிபதியிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்' என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, பீடாதிபதி கூறியதான விடயங்கள் தொடர்பில், பிரதியமைச்சர் கூறியதாவது,

'மேற்படி பிரச்சினை தொடர்பில், பீடாதிபதி என்னிடம் விளக்கமளித்தார். அவரது கூற்றின்படி, நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளை தற்பொழுது கல்வி அமைச்சு மீள்பரீசீலனை செய்துகொண்டிருக்கின்றது. நாங்களும் அதனை முழுமையாக மீள்பரீசீலனை செய்திருக்கின்றோம். அதனடிப்படையில், இரண்டாம்கட்ட நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது. அதில், 200பேர் வரை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'இந்த நேர்முகத் தேர்விலும், முதலாவதாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதற்கு அடுத்தபடியாகவே, பெருந்தோட்டங்கள் அல்லாத மாணவர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

'நடனம், கணிதம் போன்ற சில பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது. ஆனால், அந்தப் பயிற்சி நெறிக்குத் தகுதியானவர்களாக இந்திய வம்சாவளி தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அவர்களை உள்வாங்குவதற்கான விசேட அனுமதியைப் பெறுவதற்கு, அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளோம். ஆனால், இந்த நேர்முகத் தேர்வுகளில் முகம் கொடுக்கின்ற பெருந்தோட்ட மாணவர்களின் பெறுபெறுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

இந்த காரணத்தால், அவர்களை உள்வாங்க முடியாத ஒரு நிலை இருக்கின்றது. உதாரணமாக, ஒரு நேர்முகத் தேர்வு நடைபெற்ற இடத்தில் அங்கே 50 மாணவர்கள் வரவேண்டும். ஆனால், 42பேர் வருகை தந்திருந்தார்கள். அவர்களில் 36 பேர் தெரிவு செய்யப்படவில்லை. காரணம் பரீட்சை பெறுபேறுகள் போதாது. வர்த்தமாணி அறிவித்தலின்படி, மிகுதியானவர்களில் 5 பேர் தெரிவு செய்யபட்டுள்ளார்கள். ஒருவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என, பீடாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்கள் தொடர்பாக நான் எங்களுடைய அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். ஆனால், தகுதியானவர்கள் மட்டுமே உள்வாங்கப்படுவார்கள்.

கணித, விஞ்ஞான பாடங்களுக்கு, பெருந்தோட்டத் துறையைச் சார்ந்தவர்கள் இல்லாவிட்டால், இந்திய வம்சாவளித் தமிழுர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளேன்' என, பிரதியமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X