2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மார்ச் 12ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் என்கிறார் பிரதமர்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி நடைபெறுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தை இன்று புதன்கிழமை  காலை மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திறந்து வைத்து அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எதிர்ரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி எட்டு கட்சிகளுடன் இணைந்து  போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. ஒன்று சேரும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து ஒவ்வொரு கட்சிகளுக்கும் அபேட்சகர்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலின்போது தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட கூடுதலாக வாக்குகளை பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வேட்;பாளர்களை தெரிவு செய்யும்போது உறவுகளையோ தனிப்பட்ட செல்வாக்குகளையோ கருத்தில் கொள்ளாது கூடுதலான வாக்குகளை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்களை தெரிவு செய்வது முக்கியமானது.

உள்ளூராட்சிமன்றங்களில் தலைவர,; உபதலைவர்களை தெரிவு செய்யும்போது இம்முறை கூடுதலான விருப்பு வாக்குகள் பெறப்படுவது கருத்தில் கொள்ளப்பட மாட்டாதென்பதுடன் திறமை, தகுதி  மற்றும் அர்ப்பணிப்பு ஆகியனவே கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.   

இக்கூட்டத்திற்கு கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐ.ம.சு.மு அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .