2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து 13ஆம் திகதியே தீர்மானம்: மலையக மக்கள் முன்னணி

Super User   / 2011 ஜனவரி 08 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.சுவர்ணஸ்ரீ)

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து எதிர்வரும் 13ஆம் திகதி ஹட்டனில் கூடவுள்ள மத்தியக்குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்தே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.லோரன்ஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா தனித்து போட்டியிடுவதா, மலையகத் தமிழ் அமைப்புக்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை மலையக மக்கள் முன்னணி இறுதி தீர்மானம் எடுக்கவில்லை.
 
மேலும் கொழும்பு, கண்டி, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணி ஆராய்ந்து வருகின்றது.

அத்துடன் தற்போது மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

எனினும் எதிர்வரும் 13ஆம் திகதி அட்டனில் கூடவுள்ள மலையக மக்கள் முன்னணியின் மத்தியக்குழு கூட்டத்தின் பின்பே உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .