2024 மார்ச் 28, வியாழக்கிழமை

15,000 மூக்குப்பொடி டின்கள் ஹட்டனில் மீட்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா அலுத்கம பாலத்துக்கு அருகிலிருந்து 15 ஆயிரம் மூக்குத்தூள் டின்களை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக்கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்தே இந்த மூக்குத்தூள் டின்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மூக்குத்தூள் டின் ஒவ்வொன்றிலும் 10 கிராம் மூக்குத்தூள் உள்ளக்கப்பட்டுள்ளது. ஒரு டின் மலையகப் பகுதிகளில் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

போதையூட்டப்பட்டுள்ள இந்த மூக்குத்தூள் விற்பனை ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளதோடு இதனை விற்பனை செய்கின்றவர்களுக்கெதிராக அட்டன் பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மேற்படி மூக்குத்தூள் டின்களை அட்டன் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த மாதத்தில் நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா போன்ற பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது போதையூட்டப்பட்ட மூக்குத்தூள் டின்கள் மீட்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X