2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'இளைஞர்களிடம் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வளர்க்க இளைஞர் சேவைகள் மன்றம் தவறிவிட்டது'

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கண்டி மாவட்டத்திற்காக ஒழுங்கு செய்த தேசிய இளைஞர் விருது வழங்கும் விழா நேற்று கண்டி திருத்துவக்கல்லூரி மண்டபத்தில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்றது.

கண்டி மாவட்டத்தில் 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு இங்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இங்கு உரை நிகழ்த்திய பிரதி அமைச்சர்  மஹிந்தானந்த அலுத்கமகே, நாட்டில் 55 இலட்சம் இளைஞர் யுவதிகள் இருந்தபோதிலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்திருப்பது மூன்று இலட்சம் இளைஞர் யுவதிகளே. இது இளைஞர்களுடைய தவறு அல்ல இளைஞர்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வளர்க்க மன்றம் தவறி விட்டது. இனி வரும் காலங்களில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய மட்டத்தில் திறமையை வெளிப்படுத்தும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது எதிர்காலத்தை சுபீட்சமாக வைக்க நடவடிக்கை எடுக்கும்.

இளைஞர் விவகார அமைச்சின் கீழ் வருகின்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பயிற்சிகளுக்கு சேர்த்துக் கொள்ளும்போது அவர்கள் அனைவரும் கிராமத்தின் இளைஞர் கழகங்களில் அங்கத்துவம் வகித்திருப்பது கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் இங்கு கூறினார்.

கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபய ஜயரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மத்திய மாகாண பணிப்பாளர் கே.ஜீ.கருனதாச கண்டி மாவட்ட பணிப்பாளர் குமாரி கலகொட ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .