2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலைமகள் வித்தியாலயத்திற்கு ஜப்பானிய பல்கலைக்கழக குழு விஜயம்

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொஹொமட் ஆஸிக்

கண்டி கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ஜப்பானிய  பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தது. இவ்விஜயத்தின்போது  மாணவர் மேம்பாட்டுக் கழகம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இங்கு மாணவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

ஜப்பான் நாட்டின் ‘ஜெய்க்கா’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இச்சி நொசே மற்றும் கண்டி மாநகரசபை சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் த.தியாகராஜா ஆகியோரின் ஏற்பாட்டில் கலைமகள் தமிழ் வித்தியாலத்தில் இடம் பெற்ற மாணவர் மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இடம் பெற்ற வைபவத்திற்காக ஜப்பானின் ஒஸ்ஸே பல்கலைக்கழக மாணவர் குழுவே  சமூகமளித்திருந்தது.

அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுகேயிரோ அசேகாவாவும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலைமகள் தமிழ் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு தமிழ் கலை சிகழ்ச்சிகளை வழங்கி ஜப்பானிய குழுவை வரவேற்றனர்.

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .