2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையக வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.குவால்தீன்)

மலையகத்தின் வறிய குடும்பகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்று நாளை கண்டி உதவி இந்திய தூதரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய – இலங்கை உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக கண்டி மாவட்டத்தின் தெரிவுசெய்யப்பட்ட ஏழு பாடசாலைகளைச் சேர்ந்த 117 மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வு நாளைய தினம் முற்பகல் 9.30 மணியளவில் கண்டி உதவி இந்திய தூதரக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. மலையகத்தின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் மாணவர்களுக்கு இந்திய உதவித் தூதரகத்தினால் கற்றல் உபகரணங்களை இலவசமாக வழங்குவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 295 பாடசாலைகளின் மூவாயிரத்து 973 மாணவர்களும், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 93 பாடசாலைகளின் ஆயிரத்து 538 மாணவர்களும், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 32 பாடசாலைகளின் 481 மாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கண்டி உதவி இந்தியத் தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .