2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தலவாக்கலை பயணிகள் பஸ் சேவை சீரில்லை - கணபதி கனகராஜ்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாணத்தின் தனியார் பஸ் சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் பிரயாணிகளின் தேவையறிந்து தமது சேவைகளை நடத்துவதில்லையென மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ் மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

தலவாக்கல – டயகம பாதையில் போக்குவருத்து சேவையில் ஈடுபடும்  சில பஸ்கள், மாலை நேரங்களில் போதுமான பிரயாணிகள் இல்லை எனற காரணத்தை காட்டி இடை நடுவில் தமது சேவையை நிறுத்திக்கொள்வதால் அப்பாதையில் பயணிக்கும் பிரயாணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பிரதேசமக்கள்  முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய மாகான தனியார் பயணிகள் பஸ் சேவைகள் அதிகாரசபையின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரயாணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ் மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிடம் மேலும் கோரியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .