2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விகாரையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சந்தன மரங்கள் மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                             (எம்.எப்.எப்.தாஹிர்)

பதுளை நகரை அண்டிய பௌத்த விகாரை ஒன்றில் இருந்து இரண்டு வெள்ளை சந்தன மரங்களை சந்தன மரக்கடத்தல் காரர்களால் நேற்றிரவு வெட்டி எடுத்து கொண்டு செல்வதற்காக வேண்டி அருகில் இருந்த மதகு ஒன்றிற்குள் மறைத்து வைத்திருந்ததை  பொலிஸார் இன்று காலை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சந்தன மரங்கள் பதுளை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ மகிந்தாராம பிரிவேன பௌத்த விகாரையிலிருந்து நேற்று திங்கட்கிழமை இரவு கொள்ளையர்களினால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.

இச்சந்தன மரங்கள் சுமார் 15 அடி உயரமானவை. அத்துடன் இதன் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .