2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுவர்ணஸ்ரீ)

மலையகத்தில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது.  நுவரெலியா ,கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகின்றது.

இந்த அடைமழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததைத் தொடர்ந்து இந்த நீரத்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டு நேற்று  திறந்து விடப்பட்டு இன்று காலை 10  மூடப்பட்டதாகவும் கெனியன் மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்தாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ தெரிவித்தார்.

அத்துடன், ஆற்றோரங்களில் வசிக்கின்ற மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் குறித்து நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் - டிக்கோயா நகரசபைத் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.

இதேவேளை பொகவந்தலாவை, நோர்வூட், சாஞ்சிமலை ஆகிய பகுதிகளில் பெய்து வருகின்ற அடை மழையினால் இந்தப் பகுதிகளிலுள்ள ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

மேலும் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அடிக்கடி மின்சார துண்டிப்பு இடம்பெறுவதால் மின்பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .